Haldimand County பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் நான்கு வயதான சிறுமியும், 13 வயதான அவரது சகோதரனும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் நான்கு வயதான சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.