எத்தியோப்பிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த 6ஆவது நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் (35 நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உயிரிந்தனர்.
அதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களும் அடங்குவதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 வயதான டேனியல் மோர் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு செய்வதற்கு தயாரானார்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி குறித்த பெண் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில், “கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் சட்டமன்றதில் கலந்துகொள்ளும் முகமாக கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் நானும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்,
தற்போது கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு செல்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்” என பதிவிட்டுள்ளார்.