பொலிஸ் தலையகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பொதுவாக நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களானது அதிகமாக வௌ்ளிக்கிழமை கிழமைகளிலேயே இடம்பெறுகின்றது.
குறித்த விபத்துக்கள் வௌ்ளிக்கிழமைகளில் மாலை 4 மணித்தொடக்கம் 8 மணி வரையான நேரத்திற்குள் இடம்பெறுகின்றன.
கடந்தாண்டு இடம்பெற்ற 35,000 விபத்துக்களை மையகமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்ட சாரதிகளே இந்த விபத்துக்கு காரணமாக இருந்துள்ளனர்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.