அந்தவகையில் பெரும்பாண்மை கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்ரஸ் ஆகிய கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது.
இதன்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்ய இரா.சம்பந்தன் சம்மதம் தெரிவிக்க மறுமுனையில் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இது குறித்து விவாதிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.தே.க ஆரம்பத்தில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் இருப்பினும் அவர்கள் தற்போது தமது முடிவில் இருந்து மாறாமல் இருப்பார்களா என உறுதியாக தெரிவிக்க முடியாது என கூறினார்