அதன்படி சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்கில் ஆகிய இருவரும் பிரித்தானியாவிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தில் இத்தினத்தை கொண்டாடவுள்ளனர். இந்த தகவல் கென்சிங்ரன் மாளிகையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கனேடியர்களின், பிரித்தானியாவிற்கான பங்களிப்பை போற்றும் வகையில் லண்டனிலுள்ள கனேடியர்களுடன் இணைந்து அரச தம்பதியர் இத்தினத்தை கொண்டாடவுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
அதன்படி இம்முறை பொதுநலவாய தினம் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச்-11) பொதுநலவாய உறுப்பு நாடுகளில் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது