இலங்கையின் உள்ளூராட்சி முறை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் உயர் குழுவினர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் , பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன தவிசாளரும், இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன தலைவருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை இலங்கை பாராளுமன்றத்தில் வைத்து நேற்று சந்தித்து கலந்துரையாடல் மேற் கொண்டனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் அவர்களால் கட்டார் பிரதிநிதிகளுக்கு இலங்கையினது உள்ளூராட்சி முறை பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் , அதற்கான நற்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம். றிஸ்மி, தேசிய சூரா சபை பொதுச் செயலாளர் , அஷ்ஷெய்க் இனாமுல்லா மஸீஹூத்தீன், கட்டார் அரச உயர் அதிகாரிகள், கட்டார் நாட்டின் மாநகர சபைகளின் முதல்வர்கள், இலங்கையிலுள்ள கட்டார் நாட்டின் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.