மனோகர் பரிக்கரின் உடல் கோவா தலைநகர் பனாஜியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனி விமானம் மூலம் கோவா தலைநகர் பனாஜி சென்ற பிரதமர், மனோகர் பரிக்கர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அவருடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.
கோவா முதல்வரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் கணைய அழற்சி காரணமாக சிகிச்சை பெற்று வந்ததுடன் கோவா முதல்வராகவும் தனது பணியை முன்னெடுத்திருந்தார். அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றிரவு காலமானார்.
இதையடுத்து பரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது அஞ்சலியை செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.