தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 3-ம் திகதி முடிவடைகின்றது.
இதனால் நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் திகதி அறிவிப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டனர்.
இதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் திகதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் திகதி 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடைபெறுவதுடன், 3ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் திகதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு இடம்பெறும்.
மேலும், 4-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் திகதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவதுடன், 5-ம் கட்ட வாக்குப்பதிவு மே 6-ம் திகதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இடம்பெறும்.
அத்துடன், 6-ம் கட்ட வாக்குப்பதிவு மே 12-ம் திகதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இடம்பெறுவதுடன், 7-ம் கட்ட வாக்குப்பதிவு மே 19-ம் திகதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இடம்பெறும்.
வாக்குப்பதிவுகள் முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் திகதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா குறிப்பிட்டார்.