மத்திய தொழில்பிரிவு பாதுகாப்புப்படை உருவாக்கப்பட்டு 50-வது ஆண்டு விழா இன்று உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எமது தேசம் புல்வாமா, உரி போன்ற தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதைப்போல் இனியும் ஒரு தாக்குதல் இடம்பெற அனுமதிக்க மாட்டோம்.
இத்தாக்குதல்களைச் சமாளித்து நாம் மிகவும் பொறுமையுடன் இருக்கின்றோம். ஆனால் இனியும் நாம் இவ்வாறான தாக்குதல்களை அனுமதிக்க மாட்டோம்.
எமது அயல்நாடு விரோதத்துடன் எம்மை நோக்கும் போது, உள்நாட்டில் சில சக்திகள் அந்த நாட்டுக்கு ஆதரவளித்து, சதித்திட்டம் தீட்டுகின்றன.
இந்நிலையில், மத்திய தொழிற்பிரிவு படையினர் போன்ற பாதுகாப்புப் படையினர் மிகவும் முக்கியமானவர்கள். பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு இவ்வாறான நிலைமைகளில் மிக முக்கியமானது.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களை முறியடிப்பதற்கு எந்நேரமும் எமது படைகள் தயாராகவே இருக்கின்றன” என பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார்.