மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும்பொருட்டு ''மட்டு முயற்சியாண்மை – 2019 '' எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் எதிர்வரும் ஏப்ரல் 18 ,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை கண்காட்சியொன்று நடைபெறவுள்ளது
மாவட்ட அரச அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் 14 பிரதேச பிரிவுகளிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்பு கைவினை பொருட்கள் , உணவு உற்பத்திகள் ,பனையோலை, கைத்தறி உற்பத்தி பொருட்கள் , மட்பாண்ட உற்பத்திகள் , சிற்பங்கள் மற்றும் பாதணிகள் என பல்வேறு உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்
மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிற்பதற்கும் அவர்களின் உற்பத்தி பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும் எமது மாவட்டத்தின் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான ஒரு சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது
இந்த கண்காட்சியினூடாக மாவட்டத்தின் சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தவும் வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை விருத்திசெய்யவும் தன்னிறைவான சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இதன் பிரதான நோக்கமாகும் என மேலதிக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.