
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரமாக செட்லைட் ஒளிப்படமுள்ளதா? என்பததை தெரிவிக்க இயலாது. பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் தான் இந்தியா தாக்குதல்களை நடத்தியது“ என தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியன. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கான ஆதாரங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை விமானநிலையத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
