LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 17, 2019

“அப்பாவி மக்கள் மத நம்பிக்கையின் பெயரால் குறிவைக்கப்பட்டுள்ளனர்” – நியூசிலாந்து தாக்குதல் குறித்து அமைச்சர்!

நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 49 பேருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரொறன்ரோ நதன் ஃபிலிப் சதுக்கப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கனேடிய அகதிகள் மற்றும் குடியுரிமைகள் விவகார அமைச்சர் அஹ்மட் ஹூசைன், “மசூதிகளில், அமைதிக்கான, தியானத்திற்கான, வழிபாட்டுக்கான இடத்தில், அப்பாவி மக்கள் மத நம்பிக்கையின் பெயரால் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறான கொடிய சம்பவம் கனடாவிலோ, உலகின் வேறெந்த நாட்டிலோ நடைபெறுவதை நாம் அனுமதிக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை “நியூசிலாந்தில் இடம்பெற்ற இந்த கொடிய தாக்குதல் சம்பவம், ரொறன்ரோவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தை நடுநடுங்க வைத்துவிட்டது

முஸ்லிம் சமூகத்துடன் நாம் அனைவரும் துணை நிற்கின்றோம் என்பதனை வெளிக்காட்டவே நாம் அனைவரும் ரொறன்ரோவில் கூடினோம். அவர்களுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு” என ரொறன்ரோ நகரின் துணை நகரபிதா டான்சில் மினன் வோங் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7