ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போரக்குற்றத்திற்கு நிலையான நீதி வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக 10 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், ஜெனீவா கூட்டத்தொடரில் ஐ.நா. அழுத்தம் வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா தொடருந்து நிலையத்தில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையகம் மூன்றல் வரை இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
மேலும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தமிழ் அமைப்புக்கள் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கிவைக்கப்படவுள்ளது.
கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ் சமூகத்தினர் என ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
