இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் மெட்ரிக் தொன் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது சில்வர் பார்க் இண்டர்நேஷனல் லிமிட்டெட் மற்றும் ஓமான் சுல்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சின் கூட்டு நடவடிக்கையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்துவதற்கு ஒரு முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை அமைப்பதற்கு 400 ஏக்கர் நிலத்தையும் பெற்றுக்கொளவதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்ரமாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவே கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி நாணய நிதியத்தின் ஆளுனர் ஃபஹாத் பின் அப்துல்லாஹ் அல்-முபாரக் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றபோது குறித்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க சவுதி அரேபியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.