அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“காங்கிரஸ் கட்சி, தொகுதி குறித்து பேசக் குழுவை இன்னும் அறிவிக்கவில்லை. ஆகையால் அக்கட்சியின் தலைவர் அழகிரியிடம் பேசியுள்யோம். அவர் இன்று இரவுக்குள் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் காங்கிரஸ் குறித்த இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து கூட்டணியிலுள்ள அனைத்துத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் பற்றியும் அறிவிக்கப்படும்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.