03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தில் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பு ஆராதனை இடம்பெற்றது.
இன்று காலை 7.00 மணிக்கு சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையும், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டி இம்மானுவேல் ஆண்டகையும் இணைந்து திருப்பலி பூஜையை ஒப்புக் கொடுத்தனர்.
இதனையடுத்து தலவில் அன்னமாளின் திருச்சொரூப பவனி வெளி வீதி உலா வந்தது. இன்றைய அன்னமாள் ஆலயத்தின் திருவிழாவில் நாகட்டில் பல பாகங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.