கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுடனும் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதே எமது முடிவு.
தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதையும் கூறவேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்கவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வரவு செலவு திட்டம் வரவேற்கதக்கது என சுமந்திரன் கூறியுள்ளார்.
குறிப்பாக கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் நன்மை அடையும் வகையில் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பணத்தை பெறும் வகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை” எனவும் குறிப்பிட்டார்.