
அதன்படி குறித்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அதன் சந்தைகளுக்கு நியாயமான அணுகலை வழங்குவது தொடர்பாக இந்தியா அமெரிக்காவிற்கு உறுதியளிக்க தவறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த உடன்பாட்டில நீடிப்பதற்கு துருக்கி தகுதியற்றது என்ற அடிப்படையில் அதனுடனான செயற்பாடுகளையும் முறித்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த காலங்களில் எழுந்த வர்த்தக முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு பேச்சுவார்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையிலேயே, இந்தியா, துருக்கியுடனான வர்த்தக செயற்பாடுகளை முறித்துக் கொள்ள அமெரிக்கா உத்தேசித்துள்ளது.
இந்த உடன்பாட்டிலிருந்து இந்தியாவை அகற்றுவதற்கான தீர்மானம் ஜனாதிபதி ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் பொதுவான விதிகளிலிருந்து விலக்களிக்கும் முன்னுரிமை தீர்வை கட்டண திட்டத்திலிருந்தே இந்தியாவும், துருக்கியும் விலக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
