சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வீட்டுப் பணிகளின்போது பாதிக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டின் பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கான பலமான அமைப்பாக முன்வருமாறு ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டு பணிப்பெண்களாக உள்ள எமது தாய்மார்கள் சகோதரிகள் முகம்கொடுத்திருக்கும் கஷ்டங்கள் மற்றும் சோகமான நிகழ்வுகள் பற்றி மகளிர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பின், அதற்காக பெரும் நிதியை ஈட்டுகின்ற எந்தவொரு அமைப்பும் கவனம் செலுத்தாது இருப்பது கவலையானதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் எமது பெண்களுக்கு அவ்வாறு செல்கின்றபோது உள்நாட்டிலும் நாட்டுக்கு மீள திரும்பி வருகின்றபோதும் முகம்கொடுக்க நேரிடும் பாதிப்புகள் பற்றிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நாடுகளிலும் அவர்களுக்கு அனுபவிக்க நேரிடும் சில விரும்பத்தகாத சோக அனுபவங்களும் துயரமிக்கவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த விடயத்தில் நாட்டை நேசிக்கும் மக்கள் நேய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்புக்கு பாரிய பொறுப்பை நிறைவேற்ற முடியுமென்றும் தெரிவித்தார்.