தற்போது பல விற்பனை நிலயங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில விற்பனை நிலையங்களில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகின்றது.
இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போன்று இந்தகுறும்படம் அமைந்துள்ளது.
“இந்த பூமியை பசுமையாகவும், பாதுகாப்பாகவும் அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பது நம் அனைவருடைய கடமாகும். ஒரு தடவை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்ப்போம். நிறைய மரங்கள் வளர்ப்போம். பசுமைக்கு வழிவகுப்போம்”.
‘மாறலாம், மாற்றலாம்’ என்ற பெயரில் இக்குறும்படத்தை ஹரிஷ் இயக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.