இன்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பித்த இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு முதல் கட்டமாக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசியிலும், தான் லக்னோவிலும் போட்டியிடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19 ஆம் திகதி வரை வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ள நிலையில், மே 23 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.