மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மற்றும் சிறுவர் செயலகத்தின் உலர்வலய
அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர்கள் ஆரம்ப பாடசாலைக்கு நுழைதலை இலகுபடுத்தல் தொடர்பான
பரீட்சார்த்த செயல்திட்டம் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன்கீழ் மட்டக்களப்பு
மாவட்டத்தில முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் , ஆரம்பப்
பிரிவு பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்
ஆகியோருக்கு முன்பள்ளி மாணவர்கள் ஆரம்ப பாடசாலைக்கு நுழைதலை இலகுபடுத்தல் தொடர்பான
தெளிவு படுத்தும் பரீட்சார்த்த செயல்திட்டம் மட்டக்களப்பு புனித திரேசா மகளிர்
பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
இன்று நடைபெற்ற செயல்திட்டத்தின் ஊடாக ஆரம்பப்
பாடசாலை ஆசிரியர்கள் முன்பள்ளியில் இருந்து எதிர்பார்ப்பது எவ்வாறான பிள்ளைகள்
ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து
பெற்றோர் எதிர்பார்ப்பது எவ்வகையான
பிள்ளைகள் தொடர்பாக விரிவுரைகளும் , குழு செயல்பாடுகளும் நடைபெற்றது
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின்
ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி
.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப்
பணிப்பாளர் எஸ் .சசிகரன் , வலயக்கல்வி அலுவலக முறைசாரா கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் எம்
.தயானந்தன் , மண்முனை
வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .மேகராஜ் , வளவாளராக மட்டக்களப்பு வலயக்
கல்விப் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் .
புவிராஜா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் , ஆரம்பப்
பிரிவு பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்
கலந்துகொண்டனர்