கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
ஏனைய இருவரும் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
