யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து கருத்து தெரிவிக்கும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “கூட்டமைப்பின் தலைவர்கள் தேசிய ஒன்றுமையை வலியுறுத்துகின்றனர். அதற்காக சிறந்த யோசனைகளை அரசியல் யாப்பு வழி நடத்தல் குழுவில் அவர்கள் முன்வைத்தனர்.
ஆனால் அவர்கள் முன்வைத்த யோசனைகளை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை கொண்டு செல்கின்றார்.
அதற்காக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிலையான வைப்பாக பயன்படுத்துகின்றார். தமிழ் மக்கள் இதனை நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும்” என பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.