அல்பர்ட்டா டவுன்டவுன் அபார்ட்மென்ட் பகுதியில் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையிலேயே குறித்த கொலைக்குற்றச்சாட்டு தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31, 23, 23, 21 வயதுடைய நான்கு ஆண்களும், 19 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.