நேற்றுமுதல் திருமணக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. இதில் பொலிவுட் பிரபலங்கள், இருதரப்பினரும் குடும்பத்தினர் என அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி களைகட்டியது.
சயீஷாவின் ஒளிப்படம் வெளியானதே தவிர இருவரும் ஜோடியாக இருப்பது போல் எந்த ஒளிப்படமும் வெளியாகாமல் இருந்தது. இந்தக் கொண்டாட்டத்தில் உறவினர்களுடன் சயீஷா நடனமாடும் வீடியோவும், ஒளிப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.
நடிகை சயீஷா, தமிழில் ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி தற்போது திருமணமாக மலர்ந்துள்ளது.