யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் குறித்த அலுவலகம் கொழும்பில் என்றாலும் அமைக்கப்பட வேண்டும்.
எனினும் இந்த அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் குறித்த அலுவலகத்தினைச் சுதந்திரமாகச் செயற்பட அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்.
எனவே இவ்விடயத்தினையும் நாம் ஜெனீவாக் கூட்டத்தொடரில் வலியுறுத்த இருக்கின்றோம். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை எமக்கு சற்றே ஆறுதலளிக்கின்றது.
நாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் குறித்த அறிக்கை எம்மை உற்சாகமடையச் செய்திருக்கின்றது. எனவே இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் காலநீடிப்பு வழங்கப்படக் கூடாதென்பதில் நாம் ஜெனீவாவில் எமது அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரயோகிப்போம்” என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.