ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள அதிகளவான காணிகள் விடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காணிகள் விரைவில் விடுக்கப்படும்.
இதுதொடர்பாக இராணுவத்தினருடன் பேசியுள்ளோம். பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது.
விரைவில் அனைத்து காணிகளும் விடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்“ என குறிப்பிட்டார்.