கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பியதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
குறித்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது “கொடநாடு விவகாரம் தொடர்பிலான அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளதால், அவ்விடயம் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
மேலும், தமிழக அரசின் மனுவிற்கு ஏப்ரல் 3ஆம் திகதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.