வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கொழும்பில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இம்முறை இந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நிச்சயமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகளைக் கொண்ட திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
மேலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு வருமானத்தினை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை.
எனவே இந்த வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடித்து தேர்தலொன்றிற்குச் செல்வதே நாட்டினது அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வு காணும் தீர்வாக அமையும்” என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.