LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

சமநிலையில் நிறைவடைந்தது “வடக்கின் பெரும் சமர்“

“வடக்கின் பெரும் சமர்“ என வர்ணிக்கப்படும், யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டியின் 113வது அத்தியாயம் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இரண்டு கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் ஆரம்பமான இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், Dinoshan Theivendram 98 ஓட்டங்களைப் பெற்று இரண்டு ஓட்டங்களினால் சதத்தினைத் தவறவிட்டார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சார்ப்பில் பந்து வீச்சில், Iyalarasan Kamalarasa 5 விக்கட்டுக்களையும், Viyaskanth Vijayakanth 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, அதன் முதல் இன்னிங்சில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், Iyalarasan Kamalarasa 77 ஓட்டங்களையும், Viyaskanth Vijayakanth 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பில் Saraan Anton Selvathas – 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 9 விக்கட்டுக்களை இழந்து, 245 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடை நிறுத்தியது.

துடுப்பாட்டத்தில், Thanujan Christy Prasanna 66 ஓட்டங்களையும், Sowmiyan Naganthirarajah 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் Viyaskanth Vijayakanth 4 விக்கட்டுக்களையும், Mathusan Selvarasa 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

யாழ் மத்திய கல்லூரி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றிக்காக போராடிய அணித்தலைவர் Mathusan Selvarasa 36 பந்துகளில் நான்கு 6 ஓட்டங்கள், ஐந்து 4 ஓட்டங்கள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7