தினகரனுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பேட்டியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, “தினகரனின் வழக்கு எந்த வகையிலும் எங்களுக்குப் பின்னடைவாக இருக்காது. அ.தி.மு.க.வுக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் இழைத்தவர்களின் நிலை பரிதாபத்தில்தான் முடியும். இதைக் கடந்த கால வரலாறுகள் உணர்த்தி இருக்கின்றன. துரோகச் செயலைச் செய்த இவர்களுக்கும் அதே நிலைதான் ஏற்படும்” என்றார்.
அ.ம.மு.க. பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இந்நிலையில், தேர்தலைக் கருத்திற்கொண்டு அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னத்தை வழங்குமாறு தேர்தல் ஆணையகத்திடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அ.தி.மு.க.வின் வாக்குகளை தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணிசமாக பிரித்துவிடும் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் கட்டாயமும் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.