மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் இந்த விருது நேற்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வாகரை பொலிஸாரின் மத நல்லிணக்க சேவையைப் பாராட்டி வாகரைப் பொலிஸாருக்கு இந்தவிருது வழங்கப்பட்டதாக இந்நிகழ்வின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் கத்தோலிக்கர் அல்லாத வேறு மதப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மயானக் காணி பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்த அலுவலர்கள் பட்டியலில் வாகரைப் பொலிஸாரின் சேவையும் பாராட்டப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் வாகரைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.