எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.
இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் ஒன்றாரியோவைச் சேர்ந்த 13 வயதான Anushka Dixit, 14 வயதான Ashka, 37 வயதான Kosha Vaidya, 45 வயதான Prerit Dixit, 71 வயதான Pannagesh Vaidya மற்றும் 63 Hansini Vaidya ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.