இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக உள்ளன.
அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததின் காரணமாக அத்தொகுதியும் காலியாக உள்ளது. மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில், நியாயமான கால அவகாசத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்குள்ளாக 4 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்களையும் நடத்துவதே சாலப் பொருத்தமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.