வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் இன்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையை செயற்படுத்துவதாக பேரவையில் உறுதியளித்துவிட்டு தற்போது அது அரசியலமைப்புக்கு முரண் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அதனால் அரசியலமைப்புக்கு எதிரான பிரேரணையை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.