நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “காணமால்போனோர் அலுவலகத்தை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கவும் காணமாற்போனர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க முடிவு எடுத்ததற்காக நிதி அமைச்சரின் முயற்சிக்கு வரவேற்கின்றேன்.
எனினும் இதனை துரிதப்படுத்தி விரைவாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும் தோட்டத்தொழிலாளர் நாளாந்த கொடுப்பனவு குறித்து வரவு செலவு திட்டத்தில் ஏமாற்றமே. எனினும் உடனடியாக அவர்களுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என கூறினார்.