சென்னை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டம் எமக்கு இல்லை. நாம் சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே நாம் எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. தாமாகவே கொடுக்கவேண்டும். அப்படி கேட்காமல், தாமாகவே கொடுப்பதும் பெரியவிஷயம். அதேபோல் பெறுவதும் பெரியவிஷயம். ரஜினி கொடுப்பார் என்று நம்புகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.