கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை பலத்த உறைபனி மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வின்ட்சர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலான காலப்பகுதியில், 15- 25 மில்லிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இன்றைய தினம் மணிக்கு 70-லிருந்து 80 கிலோமீடடர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது