கனடாவின் அல்பேர்டா பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அதிகாரிக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் மாறி மாறி நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஆயுதமேந்திய நபரொருவர் வீதியை மறித்து தமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக குறித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.