இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பறிக்கப்பட்ட எனது வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான முறையில் பழிவாங்கப்பட்ட எனக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதம், சம்பளம், கொடுப்பனவுகள், உறுப்பினர் ஓய்வூதியம், வாகன அனுமதிப்பத்திரம் என அனைத்தும் மீண்டும் வழங்கப்படாமை எனது நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை மீறும் செயலாகும்.
அதனால் இதுதொடர்பாக ஆராய்ந்து பார்த்து எனக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.