எல்லை சுவர் அமைப்பது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கையாக அவரது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் முதல் முறையாக இந்த நிதி வழங்கலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது 91 கிலோமீற்றருக்கு எல்லை சுவர் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்டகனின் இந்த அறிவிப்பிற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
எல்லையில் சுவர் அமைப்பதற்கு அமெரிக்க காங்கிரசிடம் ஜனாதிபதி ட்ரம்ப் நிதி கோரியிருந்தார்.
ஆனால், மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதி காங்கிரசால் மறுக்கப்பட்டதையடுத்து அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு அரசாங்கம் பகுதி அளவு முடங்கியது. இந்த அரச முடக்கம் சுமார் ஒரு மாதகால அளவுக்கு நீடித்தது.
ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அடுத்து அந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது. எவ்வாறாயினும் தனது கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் தேசிய அவசர நிலை அல்லது மற்றொரு அரசு முடக்கத்தையோ மேற்கொள்ளப் போவதாகவும் ஜனாதிபதி எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.