தேர்தல் வாக்குறுதி தொடர்பான செயற்குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இதில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
குறித்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம்.
அதேபோன்று 25 கோடி மக்கள் குறைந்தபட்ச வருமானத் திட்டத்தின் கீழ் பயன் பெறவுள்ளனர். ஏழை மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்துள்ளோம். அதற்கான அனைத்து கணக்கீடுகளும் நிறைவடைந்துள்ளன.
இதன்படி நாட்டிலுள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். ஏழ்மையின் மீதான கடைசிகட்ட தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. தேசத்தில் இருந்து வறுமையை ஒழிப்போம்.
உலகிலேயே இந்த திட்டம் போன்று வேறு எந்த திட்டமும் இல்லை. இந்த திட்டம் வலிமையானது, மிகவும் சிந்தித்து, இது நிதானமாக எடுக்கப்பட்ட ஒன்று” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்