டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. மீது அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடுக்கவுள்ளோம். போலி காணொளிகளை வெளியிட்டு பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, “இதுபோன்ற காணொளிகளை வெளியிட்டு பா.ஜ.க. மீது அவதூறு பரப்புவது காங்கிரஸ் கட்சிக்கு இது முதல் முறையல்ல. அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என பா.ஜ.க. தலைவர் பூபேந்திர் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்து காணொளி ஒன்றை வெளியிட்டனர். அதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் புதிய நோட்டுகளை மாற்ற 40 சதவீதம் தரகுப் பணமாக கேட்டது பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் குறித்த காணொளி போலியானது என பா.ஜ.க. மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.