அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்தார்.
இதன்போது வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடிய பின்னர் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.