தவறான நடத்தைக் குற்றச்சாட்டு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்பாக விசாரணை செய்யவே கனடிய தலைமை நீதிபதி பெவர்லி மக்லக்லின் நியமிக்கப்பட்டவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரிட்டிஷ் கொலம்பியா சட்டமன்றத்தில் மூன்று கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில் மக்லக்லின் நியமனம் இன்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
தனிப்பட்ட செலவினங்களுக்கான வரியை செலுத்துவதில் ஏற்பட்ட முறைகேடு போன்ற பல குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜேம்ஸ் மற்றும் கேரி லென்ஸ் ஆகிய இரண்டு பேருக்கு எதிரான இரு அறிக்கைகளை சபாநாயகர் டாரில் பிளெகாஸ் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.