இந்நிலையில், அங்கு நடைபெறும் சமூகச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
இச்சமூகச் சீரழிவு குறித்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சங்கானை பிரதேச செயலரிடம் மக்கள் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளனர். குறித்த பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாடே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
வலி.மேற்கு சங்கானை பிதேச செயலர் பிரிவிலுள்ள ஜே/169 கிராம சேவையாளர் பிரிவில் தனிநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்துவருகின்றார். அத்துடன் குறித்த விற்பனையகத்தில் மதுபானங்களை நுகர்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சில பெண்களை அங்கு அழைத்து விபச்சார நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாட்டினால் அங்குள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
தனி ஒருவருடைய பொறுப்பற்ற செயற்பாட்டினால் அங்குள்ள இளைஞர்களும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கையை எடுத்து தமது பாதுபாப்பினை உறுதிப்படுத்துமாறு மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.