இளையான்குடியில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ப.சிதம்பரம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மத்தியில் பா.ஜ.க ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுப்பது மக்களாகிய உங்கள் கைகளிலேயே உள்ளது. அதேபோன்று தற்போது தமிழகத்தில் நிலவும் அ.தி.மு.க.வின் பொம்மை ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இந்நிலையில் எதிர்வரும் மக்களவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து மத்திய, மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.
அந்தவகையில் வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றாத தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, புதிய திருப்பத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும்” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.