இலங்கைக்கான, அவுஸ்திரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலீப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் போர் முடிந்த 10 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இலங்கை எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இலங்கை மீது மனித உரிமைகள் பேரவையில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம் இதனை இலங்கை தீPவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்கின்றோம்.
இலங்கை தொடர்பாக கடந்த வாரம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அவுஸ்ரேலியாவும் இணை அனுசரனை வழங்கியுள்ளது.
இலங்கை அவற்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போரின் போது இரு தரப்பினரும் இழைத்த குற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும். இலங்கையுடன் இணைந்து பயணிக்க அவுஸ்திரேலியா எதிர்பார்கின்றது’ என தெரிவித்துள்ளார்.