கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இம்முறை இந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருப்பது வரவு செலவுத் திட்டம் எனக் கூற முடியாது. அது ஒரு கடன் திட்டமே.
குறித்த வரவு செலவுத் திட்டத்தில் முழுமான விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. இதனால் நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்காமல் வெறுமையான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளனர். நிச்சயம் இந்த தீர்வுத் திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையப் போவதில்லை.
அத்துடன் இந்த வரவுசெலவுத் திட்டத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை” என டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.